'ருத்ரன்' படம் குறித்து லோகேஷ் கனகராஜ் ட்விட்.. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ராகவா லாரன்ஸ் நடிப்பில் பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் உருவான ’ருத்ரன்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் நல்ல வசூலை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் கதிரேசன் ஆகிய இருவருக்கும் மற்றும் ’ருத்ரன்’ பட குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள், இந்த படத்திற்கான நல்ல விமர்சனங்கள் வெளியாகி வருவது கேட்டு தான் மகிழ்ச்சி அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜின் இந்த ட்விட்டிற்கு ராகவா லாரன்ஸ் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் தங்களது நன்றியை தெரிவித்தனர், மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் சரத்குமார் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
எதிர்நாயகனாக ருத்ரனில் நடித்தமைக்கு பாராட்டி, பெரும் வெற்றிப் படமாக்கி கொண்டாடிவரும் ரசிக பெருமக்களுக்கும், என் அனைத்து முயற்சிகளுக்கும் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் ஊடக நண்பர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ருத்ரன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
Thank you soo much @Dir_Lokesh sir for your wishes 🙏🏻🙏🏻🙏🏻#Rudhran https://t.co/33uDTDdHWF
— S Kathiresan (@kathiresan_offl) April 16, 2023
Thank you so much for your wishes brother 🙏🏼 https://t.co/Of7KoOocfD
— Raghava Lawrence (@offl_Lawrence) April 16, 2023
எதிர்நாயகனாக ருத்ரனில் நடித்தமைக்கு பாராட்டி, பெரும் வெற்றிப் படமாக்கி கொண்டாடிவரும் ரசிக பெருமக்களுக்கும், என் அனைத்து முயற்சிகளுக்கும் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் ஊடக நண்பர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.@kathiresan_offl @offl_Lawrence @onlynikil pic.twitter.com/m7RUeQdSsQ
— R Sarath Kumar (@realsarathkumar) April 16, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com