லோகேஷ் கனகராஜ் ஃபேஸ்புக்கில் ஆபாச வீடியோக்கள்? என்ன ஆச்சு? ரசிகர்கள் அதிர்ச்சி
- IndiaGlitz, [Wednesday,December 13 2023]
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஃபேஸ்புக் ஹேக் செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அந்த தளத்தில் ஆபாச வீடியோக்கள் உட்பட பல விஷயங்கள் பகிரப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ’லியோ’ ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள ’ஃபைட் கிளப்’ என்ற படம் வரும் வெள்ளி அன்று வெளியாக உள்ளது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கங்களில் தனது படங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் அவரது பேஸ்புக் பக்கத்தில் திடீரென ஆபாச வீடியோக்கள் பகிரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவரது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டதை அடுத்து தற்போது அந்த பேஸ்புக் பக்கம் செயல்பாட்டில் இல்லை என தெரிகிறது.
திடீரென லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து லோகேஷ் கனகராஜ் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.