'தளபதி 67'ல் த்ரிஷா: மறைமுகமாக உறுதி செய்தாரா லோகேஷ் கனகராஜ்?
Send us your feedback to audioarticles@vaarta.com
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் அவ்வப்போது கசிந்து இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் சமந்தா மற்றும் த்ரிஷா ஆகியோர்கள் தான் அந்த இருவர் என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம்.
இந்த தகவலை இன்னும் படக்குழுவினர்கள் உறுதி செய்யாத நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ், த்ரிஷா ’தளபதி 67’ படத்தில் நடிக்க இருப்பதை மறைமுகமாக உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் கடந்த சில நாட்களாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருந்தாலும் அவர் சமீபத்தில் த்ரிஷாவின் டுவிட்டர் பக்கத்தை ஃபாலோ செய்துள்ளதாக ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ‘தளபதி 67’ படத்தில் த்ரிஷா நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சில ரசிகர்களோ லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே த்ரிஷாவின் டுவிட்டர் பக்கத்தை ஃபாலோ செய்து வருகிறார் என்றும் கூறிவருகின்றனர்.
ஏற்கனவே விஜய் மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய நான்கு படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் ஐந்தாவது முறையாக மீண்டும் இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
EXCLUSIVE:@Dir_Lokesh started following #Trisha in twitter. @trishtrashers have roped in as one of female lead in #Thalapathy67 @actorvijay.
— #Thalapathy67 (@Vijay67FiIm) August 20, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout