'கைதி'யில் கொல்லப்பட்ட கேரக்டர் 'விக்ரம்' படத்தில் இடம்பெற்றது எப்படி? லோகேஷ் கனகராஜ் விளக்கம்

’கைதி’ திரைப்படத்தில் கொல்லப்பட்ட கேரக்டர் எப்படி ’விக்ரம்’ திரைப்படத்தில் வந்தது என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஒருசில காட்சிகள் ’கைதி’ படத்துடன் தொடர்புடைய காட்சிகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் உரையாடிய லோகேஷ் கனகராஜிடம் ‘கைதி’ திரைப்படத்தில் உயிரிழந்த அர்ஜுன் தாஸ் கேரக்டர் எப்படி ‘விக்ரம்’ திரைப்படத்தில் உயிருடன் வந்தது என்று கேள்வி எழுப்பி இருந்தார்

இதற்கு பதிலளித்து லோகேஷ் கனகராஜ், ‘கைதி’ திரைப்படத்தில் நெப்போலியனால் அன்பு என்ற அர்ஜுன் தாஸ் கேரக்டரிடன் தாடை மட்டும் தான் உடைக்கப்பட்டது. அதனால்தான் ‘விக்ரம்’ திரைப்படத்தில் அவருக்கு தாடையில் தையல் இருக்கும்படியாக கட்டப்பட்டது. இதுகுறித்து மேலும் ’கைதி 2’ திரைப்படத்தில் விவரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.