இயக்குனர் லிங்குசாமியின் சிறை தண்டனை விவகாரத்தில் திடீர் திருப்பம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

  • IndiaGlitz, [Monday,April 24 2023]

பிரபல இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாத கால சிறை தண்டனை விதித்திருந்த நிலையில் அந்த தண்டனை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காசோலை வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாத கால சிறை தண்டனை விதித்திருந்தது. இந்த நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படுவதாக இயக்குனர் லிங்குசாமி ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் அது குறித்து அவர் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி இயக்குனர் லிங்கசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிவிபி நிறுவனத்தால் தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்ய கோரியும் தடை விதிக்க கோரியும் லிங்குசாமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் 20 சதவீதம் தொகையை 6 வாரங்களில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் படி சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.