உதயநிதி ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதி கொடுத்த இயக்குனர் லிங்குசாமி!

  • IndiaGlitz, [Monday,May 31 2021]

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்திற்கு சென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் திரையுலகினர் பலரும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித் உள்பட பலர் தமிழக அரசுக்கு நிதி உதவி செய்துள்ள நிலையில் தற்போது இயக்குனர் லிங்குசாமி தனது பங்காக சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினிடம் ரூபாய் 10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.