ஜெயம் ரவியின் 25வது படம் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Friday,April 19 2019]

கடந்த 2003ஆம் ஆண்டு 'ஜெயம்' படத்தில் தமிழில் அறிமுகமான ஜெயம் ரவி 16 ஆண்டுகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது 25வது படம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இவர் நடிக்கும் 25வது படத்தை இயக்குனர் லட்சுமணன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த 'ரோமியோ ஜூலியட்' மற்றும் 'போகன்' திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். இதற்கு முன்னர் ஜெயம் ரவி நடித்த 'டிக் டிக் டிக்' படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படம் இமானின் 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவியின் 25வது படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த 'அடங்கமறு' திரைப்படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயம் ரவி தற்போது 'கோமாளி' என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரதீப் ரெங்கநாதன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.
 

More News

கார்த்தி, ஜோதிகாவுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபல நடிகர்!

நடிகர் கார்த்தியும், நடிகை ஜோதிகாவும் ஒரு படத்தில் அக்கா தம்பியாக நடிக்கவுள்ளனர் என்பதையும் இந்த படத்தை 'பாபநாசம்' புகழ் ஜீத்துஜோசப் இயக்கவுள்ளார்

சென்னை வாக்காளர்களுக்கு என்ன ஆச்சு? தமிழத்திலேயே குறைந்த சதவீதம்!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவிக்கையில்

ஓட்டு போட்டவுடன் துள்ளி குதித்த நடிகர் வடிவேலு!

நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில் திரையுலகினர் உள்பட அனைவரும் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர். 

வெளியானது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: திருப்பூர் மாவட்டம் முதலிடம்

இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் தேர்வு முடிவுகள் வெளியானது

சிவகார்த்திகேயன் என்ன ஸ்பெஷலா? தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில்  நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் ஓட்டு போட சென்றபோது, சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை