ரோமியோ ஜூலியட்' படத்துக்கு நேர் எதிரானது 'போகன்' : லக்ஷ்மண்

  • IndiaGlitz, [Monday,June 13 2016]

கடந்த ஆண்டு வெளிவந்த வெற்றிப்படமான 'ரோமியோ ஜூலியட்' படக்குழுவான ஜெயம் ரவி, ஹன்சிகா, இயக்குனர் லக்ஷமண் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள படம் 'போகன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் லக்ஷ்மண் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

ரோமியோ ஜூலியட்' படம் ஜாலியான காதல் கதை. ஆனால் அதற்கு நேர் எதிரானது போகன். இதுவொரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் படம் என்றும் பார்வையாளர்களுக்கு வேறு மாதிரியான புது உணர்வை இந்த படம் ஏற்படுத்தும் என்றும் காக்கி சட்டைக்கு கவுரவம் சேர்க்கும் படமாக அமைந்துள்ள இந்த படத்தில் மெலிதான காமெடியும் உண்டு என்றும் கூறியுள்ளார்.

இந்த படத்தில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி ஆகிய இருவருமே கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடிக்கின்றனர். ஆனால் இருவருக்கும் ஒரே வேடம்தான். ஒரே வேடத்தில் இருவித குணாதிசியங்களை வெளிக்கொணரும் வேடங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். தாமரை, மதன்கார்க்கி, ரோகேஷ் இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளனர். பிரபு தேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.