இளையராஜாவிடம் சேர் வாங்க கூட காசில்லையா? லட்சுமி ராமகிருஷ்ணனால் சர்ச்சை!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவு செய்த புகைப்படம் ஒன்றை பார்த்த நெட்டிசன் இளையராஜாவிடம் சேர் வாங்க கூட காசு இல்லையா என பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் பாடல்கள் கம்போசிங் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படத்தில் இசைஞானி இளையராஜா ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஆர்மோனியத்தில் பாடலை கம்போஸ் செய்து காட்டுவது போலவும் அவருக்கு எதிரே தரையில் லட்சுமிராமகிருஷ்ணன் உட்கார்ந்திருப்பது போல புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இளையராஜாவிடம் சேர் வாங்க கூட காசு இல்லையா? தன்னைப்போலவே மற்றவர்களும் உட்கார சேர் கொடுக்கவேண்டுமா? சக மனிதர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாதவரா இளையராஜா? என விமர்சனம் செய்திருந்தனர்.
இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், ‘இளையராஜா அவர்கள் கடவுள் போன்றவர், அவரது காலடியில் அமைந்திருப்பதை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். மேலும் தரையில் உட்காருவது உடலுக்கு நல்லது. எனவே அதனை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
I have much to share about the few hours of experience we had with #Legend Raja sir & Amazing to see the dedication, passion, humility of @thondankani @DirectorMysskin #Abirami #TapasNayak inspite of being accomplished and successful ❤️#DirMysskin is doing a cameo #Workingstills pic.twitter.com/oZeskMpwaU
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) August 13, 2022
Creator of his caliber, a senior person, #Raja sir is equal to God, I consider it a blessing to be able to sit under his feet. Would be happy to do the same every time I go to his place . And sitting in the floor is good for health my friend, Happy 76th day of independence ??
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) August 15, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com