பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் தந்தை காலமானார்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்கள் இயக்கிய 'கவண்' திரைப்படம் இந்த வாரம் வெளிவரவுள்ள நிலையில் இன்று அவரது தந்தை கே.எம்.வெங்கடேசன் காலமானார். அவருக்கு வயது 74
கே.வி.ஆனந்த் அவர்களின் தந்தை உடல்நலமின்றி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி சற்று நேரத்திற்கு முன்பு மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மறைந்த வெங்கடேசன் அவர்களது உடல் அடையாறு பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை மாலை அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
தந்தையை இழந்து வாடும் கே.வி.ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தார்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு அமரர் வெங்கடேசன் அவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com