மறைந்த இயக்குனர் கேவி ஆனந்த் வீட்ல விசேஷம்.. வாழ்த்திய திரையுலக பிரபலங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் கேவி ஆனந்த் மகள் திருமணம் இன்று நடந்ததை அடுத்து திரை உலக பிரபலங்கள் பலர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்
ஒளிப்பதிவாளர், இயக்குனர் கேவி ஆனந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையின் பலன் இன்றி மரணமடைந்தார். அவரது இறப்பு தமிழ் திரை உலகிற்கு பேரிழப்பாக இருந்தது என்பதும் தமிழ் திரை உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கேவி ஆனந்த் அவர்களுக்கு சினேகா, சாதனா ஆகிய இரண்டு மகள்கள் உள்ள நிலையில் சாதனாவிற்கு இன்று திருமணம் நடைபெற்றது. அவர் விஷ்ணு ராஜ் என்பவரை திருமணம் செய்து உள்ளார். இருவரும் ஆர்கிடெக் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த திருமணத்தில் மணிரத்னம் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com