close
Choose your channels

'தர்மதுரை'யை பாராட்டிய பிரபல இயக்குனர்

Tuesday, August 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் மாபெரும் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது.
இந்த படத்தை கோலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலதரப்பினர் பார்த்துவிட்டு இயக்குனர் சீனுராமசாமி உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் சீனுராமசாமியை பாராட்டியுள்ளார். 'தர்மதுரை' திரைப்படம் மனதை உருக்க வைத்த மதிப்பு மிகுந்த திரைப்படம் என்று பாராட்டியுள்ளார். இதற்கு சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 'தர்மதுரை' படத்தை பிறமொழிகளில் ரீமேக் செய்வது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இவற்றில் இந்தி ரீமேக்கை சீனுராமசாமி இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை பிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment