'பத்து தல' படப்பிடிப்பு: இயக்குனருடன் சிம்பு  இருக்கும் புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Friday,July 08 2022]

நடிகர் சிம்பு நடித்துவரும் ’பத்து தல’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்க இருந்தது. இந்த படப்பிடிப்பில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் மோதும் காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திடீரென சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக சிம்பு ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது டி ராஜேந்தர் உடல்நிலை தேறியுள்ள நிலையில் இந்தியா திரும்பி உள்ள சிம்பு அடுத்த கட்டமாக ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் இணைகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இயக்குனர் கிருஷ்ணா தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவுடன் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் அவர்களின் உடல்நிலை தேறி வருவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பை சகோதரர் சிம்புவுடன் இணைந்து மீண்டும் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தில் சிம்பு நீண்ட தாடியுடன் உள்ளதை அடுத்து அதுதான் ’பத்து தல’ படத்தின் கெட்டப் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சூர்யா-ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பதும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சந்தானம் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: குலுங்க குலுங்க சிரிக்க ரெடியா இருங்க!

நடிகர் சந்தானம் நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

பிரமாண்டம் என்றால் இதுதான்: 'பொன்னியின் செல்வன்' டீசர் ரிலீஸ்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' டீசர் இன்று மாலை சரியாக ஆறு மணிக்கு வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களுக்கு சவால் வீடியோ வெளியிட்ட சன்னிலியோன்!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ் உள்பட தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தமிழில் அவர் நடித்து வரும் ' ஓ மை கோஸ்ட்' எ

புதிய கார் வாங்கிய விஜய் டிவி பிரபல ஜோடி: புகைப்படம் வைரல்!

விஜய் டிவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தவர்கள் அடுத்தடுத்த நிகழ்ச்சியிலும் வாய்ப்புகள் பெற்று சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையிலும் நடித்து வருகிறார்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த முதல்வர் ஸ்டாலின்: படப்பிடிப்பு எங்கே தெரியுமா?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நடித்த சில காட்சிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது