'பத்து தல' படப்பிடிப்பு: இயக்குனருடன் சிம்பு இருக்கும் புகைப்படம் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிம்பு நடித்துவரும் ’பத்து தல’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்க இருந்தது. இந்த படப்பிடிப்பில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் மோதும் காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திடீரென சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக சிம்பு ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் தற்போது டி ராஜேந்தர் உடல்நிலை தேறியுள்ள நிலையில் இந்தியா திரும்பி உள்ள சிம்பு அடுத்த கட்டமாக ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் இணைகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இயக்குனர் கிருஷ்ணா தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவுடன் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் அவர்களின் உடல்நிலை தேறி வருவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பை சகோதரர் சிம்புவுடன் இணைந்து மீண்டும் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தில் சிம்பு நீண்ட தாடியுடன் உள்ளதை அடுத்து அதுதான் ’பத்து தல’ படத்தின் கெட்டப் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சூர்யா-ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பதும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
All set for #pathuthala shoot with bro @SilambarasanTR_ feeling happy for recovery of his dad @kegvraja @StudioGreen2 @Gautham_Karthik @arrahman @PenMovies @NehaGnanavel @Dhananjayang pic.twitter.com/S9JbYXEncy
— Obeli.N.Krishna (@nameis_krishna) July 8, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com