திருப்பதி கோவிலில் நடிகைக்கு முத்தமிட்ட இயக்குனர்.. வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகையை இயக்குனர் ஒருவர் திருப்பதி கோவிலில் முத்தமிட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபாஸ் நடித்த ’ஆதிபுருஷ்’ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று திருப்பதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படம் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராமர் கேரக்டரில் பிரபாஸ், சீதை கேரக்டரில் கீர்த்தி சனான், ராவணன் கேரக்டரில் சையது அலிகான் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று திருப்பதியில் டிரைலர் ரிலீஸ் விழா முடிவடைந்ததை அடுத்து இன்று காலை பிரபாஸ், கீர்த்தி சனான். இயக்குனர் ஓம் ராவத், திருப்பதியில் விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
இதனை அடுத்து கீர்த்தி சனோன் விடைபெறும் போது அவருக்கு முத்தம் கொடுத்து இயக்குனர் ஓம் ராவத் வழியனுப்பி வைத்தார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Actress #KritiSanon and Director #OmRaut visited #Tirumala this morning to seek blessings.#Adipurush #AdipurushOnJune16th#ShreyasMedia #ShreyasGroup pic.twitter.com/qXs4IJGqni
— Shreyas Media (@shreyasgroup) June 7, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com