திருப்பதி கோவிலில் நடிகைக்கு முத்தமிட்ட இயக்குனர்.. வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,June 07 2023]

பிரபல நடிகையை இயக்குனர் ஒருவர் திருப்பதி கோவிலில் முத்தமிட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபாஸ் நடித்த ’ஆதிபுருஷ்’ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று திருப்பதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படம் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராமர் கேரக்டரில் பிரபாஸ், சீதை கேரக்டரில் கீர்த்தி சனான், ராவணன் கேரக்டரில் சையது அலிகான் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று திருப்பதியில் டிரைலர் ரிலீஸ் விழா முடிவடைந்ததை அடுத்து இன்று காலை பிரபாஸ், கீர்த்தி சனான். இயக்குனர் ஓம் ராவத், திருப்பதியில் விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

இதனை அடுத்து கீர்த்தி சனோன் விடைபெறும் போது அவருக்கு முத்தம் கொடுத்து இயக்குனர் ஓம் ராவத் வழியனுப்பி வைத்தார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

More News

மாதவன், தனுஷ் பட நடிகை கர்ப்பம்.. இன்ஸ்டாவில் அறிவிப்பு..!

 மாதவன், தனுஷ் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜெயம் ரவி - நயன்தாராவின் 'இறைவன்' ரிலீஸ் தேதி இதுதான்: படக்குழு அறிவிப்பு..!

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் அகமது இயக்கத்தில் உருவாகிய 'இறைவன்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்

ஷிவாங்கிற்கு சொம்பு தூக்குகிறார்களா நடுவர்கள்? நெட்டிசன் கேள்விக்கு வெங்கடேஷ் பட் பதில்..!

கடந்த சீசனில் சமையலுக்கான பொருள்களின் பெயர் கூட தெரியாமல் இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக ஆனது மட்டுமின்றி அவர் இந்த சீசனின் பைனலிஸ்ட்களில் ஒருவராகவும் தேர்வு பெற்று உள்ளார்.

தனுஷ் படத்தில் நடித்த நடிகர் தற்போது டிரைவரா? வைரல் புகைப்படங்கள்..!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'காதல் கொண்டேன்' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் தற்போது டிரைவராக இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரல் ஆகி வருவது பரபரப்பை

அடுத்தடுத்த மாதங்களில் நயன்தாராவின் 2 படங்கள் ரிலீஸ்? ரசிகர்கள் உற்சாகம்..!

நயன்தாரா நடித்து வரும் 'ஜவான்' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்பே அதாவது ஆகஸ்ட் மாதம் நயன்தாராவின் இன்னொரு திரைப்படம் ரிலீஸ் ஆக