நடிகையின் காலை வருடி முத்தமிட்ட சர்ச்சை இயக்குனர்: 1 மணி நேர வீடியோ வைரல்

பிரபல சர்ச்சைக்குரிய இயக்குனர் நடிகையின் கால்களை முத்தமிட்ட வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர்ராம்கோபால் வர்மா. இவரது படங்கள் மட்டுமின்றி இவரது சமூக வலைதள பதிவுகளும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகை ஆசு ரெட்டி சோபாவில் உட்கார்ந்து இருக்க அவர் கால் அருகே ராம்கோபால் வர்மா உட்கார்ந்து இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகை ஆசு ரெட்டியிடம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசும் ராம் கோபால் வர்மா அதன்பின் திடீரென நடிகையின் காலை முத்தமிட்டு காட்சி உள்ளது. இந்த வீடியோவுக்கு ஏராளமான எதிர்மறை கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஆசு ரெட்டி நடிப்பில் ராம்கோபால் வர்மா இயக்கிய ‘டேஞ்சரஸ்’ என்ற திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.