ஜோசப் விஜய்.. களத்தில் சந்திப்போம்.. விஜய் அரசியல் வருகை குறித்து தமிழ் இயக்குனரின் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நேற்று அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததோடு தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியின் பெயரையே அறிவித்தார். மேலும் அவர் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட போவதாகவும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியில்லை என்றும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்தார்
எனவே அடுத்த இரண்டு ஆண்டுகள் அவர் முழுமையான அரசியலில் ஈடுபடுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர். பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் ஒரு சிலர் எதிர்மறையாகவும் விமர்சனம் செய்தனர்
இந்த நிலையில் திமுக ஆதரவாளரும் திரைப்பட இயக்குனருமான கரு பழனியப்பன் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கூறியதாவது:
திரை வெற்றிக்காக அரசியலைப் பயன்படுத்தாமல், திரைப்பயணம் முடித்து அரசியலுக்கு வருவேன் எனச் சொல்லும் விஜய் பாராட்டுக்கு உரியவர்...
Welcome to the political arena
Joseph Vijay...!
களத்தில் சந்திப்போம்...!
என கூறியுள்ளார். விஜய்க்கு இதுவரை வாழ்த்து தெரிவித்தவர்கள் யாரும் ஜோசப் விஜய் என்று கூறாத நிலையில் கரு பழனியப்பன் மட்டும் அவருடைய பெயரில் ஜோசப் என்பதை சேர்த்து கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது
விஜய்யே கூட நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விஜய் என்று மட்டுமே குறிப்பிட்டு இருந்தார் என்பதும் ஜோசப் என்பதை அவர் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments