இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது: குடியுரிமை மசோதா குறித்து பிரபல இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா இரண்டு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தமிழகத்தில் திமுக இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் பல திரையுலக பிரபலங்கள் அவ்வப்போது தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ உள்பட பல ஹிட் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் குடியுரிமை சீர்திருத்த சட்டம் என்பது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் மாணவர்கள் மீது வன்முறையை திணிக்கும் போலீசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறிய கார்த்திக் சுப்புராஜ், ‘இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை வழக்கம்போல் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Citizenship Amendment Act - Sounds seriously wrong & against Secularism..
— karthik subbaraj (@karthiksubbaraj) December 17, 2019
Let's keep India Secular
Say NO to CAA
Say NO to NRC
Say NO to Police Violence on Students
இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது..... #IndiansAgainstCAB #JamiaProtests
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments