கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படம்.. செம அப்டேட் வெளியீடு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
இயக்குனர் கார்த்திக் நரேன் 22 வயதில் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதன் பின் அருண் விஜய் நடித்த ’மாஃபியா’ என்ற திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், தனுஷ் நடித்த ’மாறன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் 'நிறங்கள் மூன்று’. அதர்வா, நிக்கி கல்ராணி, சரத்குமார் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரோடக்சன் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவலை கார்த்திக் நரேன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ’நிறங்கள் மூன்று’ என்ற திரைப்படத்தின் டிரைலர் வரும் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐங்கரன் நிறுவனத்தின் கருணாமூர்த்தி தயாரிப்பில் உருவான இந்த படம் ஜேக்ஸ் பிஜாய் இசையில், டிஜோ டாமி ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
‘Nirangal Moondru’ trailer dropping on March 3rd! 🎬🤍@Atharvaamurali @realsarathkumar @actorrahman @Ayngaran_offl #NirangalMoondru pic.twitter.com/FiMaLq4vgC
— Karthick Naren (@karthicknaren_M) March 1, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com