விஜய்யுடன் கார்த்திக் சுப்புராஜின் திடீர் சந்திப்பு ஏன்?

  • IndiaGlitz, [Monday,November 16 2015]

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பீட்சா, ஜிகர்தண்டா என இரண்டே படங்களில் கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம்பிடித்த கார்த்திக் சுப்புராஜ், சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்து பேசியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜை நேரில் அழைத்து 'ஜிகர்தண்டா' படத்தை விஜய் பாராட்டியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரின் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார்? என்பது இன்னும் முடிவாகாத நிலையில், கார்த்திக் சுப்புராஜுக்கு அந்த யோகம் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

அஜித் பிறந்த நாளில் விஜய் தரும் விருந்து

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு கொட்டும் மழையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது....

லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்படவிழாவில் விருதுகளை அள்ளிக்குவித்த 'உத்தம வில்லன்'

கமல்ஹாசன் நடிப்பில் ரமேஷ் அரவிந்த இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான 'உத்தம வில்லன்' திரைப்படம் எதிர்பார்த்த வசூலை குவிக்க தவறினாலும், எதிர்பாராத விருதுகளை குவித்துள்ளது...

'டார்லிங்' இயக்குனருக்கு அடித்த அதிர்ஷ்டம்

இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தை தயாரித்த 'லைகா நிறுவனம்' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில்...

நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று முதல்வருடன் சந்திப்பு?

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மாநிலத்தின் பல பகுதிகள் மிதந்து வருகின்றன...

ஒரே படத்தில் தமன்னா, காஜல் அகர்வால், ஸ்ரீதிவ்யா

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் கே.எஸ். பிரகாஷ்ராவ் இயக்கியுள்ள இஞ்சி இடுப்பழைகி' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் மொத்தம் ஏழு பிரபல நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது...