மணிரத்னம் உதவியாளரின் அடுத்த படத்தில் கவுதம் கார்த்திக்

  • IndiaGlitz, [Thursday,August 18 2016]

பிரபல இயக்குனர் மணிரத்னம் உதவியாளரும் ஜெயம்கொண்டான்', கண்டேன் காதலை', போன்ற படங்களை இயக்கியவருமான இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.
ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கவுள்ளார். நாயகி மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் இந்ட படத்தை அபிரா பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.கண்ணன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. செல்வா இந்த படத்தின் எடிட்டராக பணிபுரியவுள்ளார்.
செப்டம்பர் 12 முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளதாகவும், ஆர்.கண்ணனின் முந்தைய படங்கள் போலவே இந்த படமும் ரசிகர்களின் பேராதரவை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.