அரசியலில் மீண்டும் குதித்த கே.பாக்யராஜ்: எந்த கட்சியில் தெரியுமா?
- IndiaGlitz, [Friday,August 26 2022]
திரைப்பட இயக்குனர் கே பாக்யராஜ் மீண்டும் அரசியலில் குதித்து உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருக்கும் போது அதிமுக ஆதரவாளராக இருந்த கே பாக்யராஜ், எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுகவிலிருந்து விலகி ‘எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.
அதனை அடுத்து அவர் சில காலம் திமுகவில் இருந்த நிலையில் சமீபத்தில் அவர் பாஜகவுக்கு ஆதரவாக பேசியதால் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அதிமுகவில் இயக்குனர் பாக்யராஜ் இணைந்துள்ளார். அதிலும் அவர் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இணைந்துள்ளார் என்பதும், ஓபிஎஸ் முன் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டதாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஓபிஎஸ் முன் அதிமுகவில் கே பாக்யராஜ் இணைந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.