இலவச விளம்பரம் ஆரம்பிச்சுட்டீங்க போல: சூர்யா பட பாடல் பிரச்சனை குறித்து விஜய் பட இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் குறித்த வழக்கு ஒன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்
இந்த படத்தில் இடம்பெற்ற ’மண்ணுருண்ட மேல’ என்ற பாடலில் ஜாதியைக் குறிப்பிடும் ஒரு வார்த்தை இருப்பதாகவும், இது அமைதியை குலைக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இந்தப் பாடலை ஏகாதசி என்பவர் எழுதியிருந்தார். இந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறை உத்தரவிட்டுள்ளது
இந்த நிலையில் இந்த வழக்கின் செய்தி குறித்து இயக்குநர் ஜான் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’இலவச விளம்பரம் ஆரம்பிச்சிட்டிங்க போல... குட் பாய்ஸ்’ என்று பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’சச்சின்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான் மகேந்திரனின் இந்த டுவிட் போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இலவச விளம்பரம் ஆரம்பிச்சுட்டீங்க போல...குட் பாய்ஸ்...
— John Mahendran (@johnroshan) September 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments