இயக்குனர்தான் கப்பலின் கேப்டன்: வடிவேலுக்கு பிரபல இயக்குனர் பதிலடி
- IndiaGlitz, [Wednesday,June 12 2019]
இயக்குனர் சிம்புதேவனையும் ஷங்கரையும் நடிகர் வடிவேலு சர்ச்சைக்குரிய வகையிலும் ஒருமையிலும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒட்டுமொத்த இயக்குனர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. ஒரு படம் வெற்றி அடைந்தாலும் தோல்வி அடைந்தாலும் முழு பொறுப்பை ஏற்கவேண்டியது இயக்குனர்தான். அதனால் தான் இயக்குனர்களுக்கு மாஸ் நடிகர்கள் கூட தகுந்த மரியாதை அளிப்பதுண்டு.
இந்த நிலையில் தன்னை கதாநாயகனாக்கிய சிம்புதேவனையும் ஷங்கரையும் வடிவேலு தரக்குறைவாக பேசியதற்கு ஏற்கனவே இயக்குனர்கள் சமுத்திரக்கனி, விஜய் மில்டன், நவீன், சுசீந்திரன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்ததை பார்த்தோம். இந்த நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது வடிவேலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
எப்போதுமே இயக்குனர்தான் கப்பலின் கேப்டன். ஒரு படம் நன்றாக ஓடினால் அதில் அனைவருக்கும் பங்குண்டு. அதுவே நஷ்டம் என்றால் 'டைரக்டர் சொதப்ப்பிட்டான்பா' இதுதான் பரவலாக பேசப்படும் ஒன்று. என்ன கொடுமை சார் இது! ஒரு ஆகச்சிறந்த கலைஞன், தன்னை கதாநாயகனாக வைத்து மிகப்பெரிய வெற்றியை தந்த ஒரே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை தரக்குறைவாக பேசியது என்னை மனமுடைய செய்தது. இயக்குனர் சிம்புதேவனை அருகில் இருந்து பார்த்து கொண்டிருக்கின்றேன். அவர் அருமையான படைப்பாளி மட்டுமில்லை, மிகச்சிறந்த மனிதர். ஷங்கர் அவர்களை பற்றி யாரும் சொல்ல அவசியமே இல்லை. அவர் என்றுமே கொண்டாடப்பட வேண்டியவர். எல்லோருமே இங்கு மக்களை மகிழ்விக்கத்தான் இருக்கின்றோம். இதில் வன்மம் வேண்டாமே.. அன்பை மட்டும் வளர்ப்போம்' என்று இயக்குனர் வெங்கட்பிரபு கூறியுள்ளார்.
இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் உருவாகி வரும் 'கசடதபற' படத்தை தற்போது இயக்குனர் சிம்புதேவன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Let’s spread love not hatred!! #dont_forget_the_creators @shankarshanmugh @chimbu_deven @NaveenFilmmaker @thondankani @vijaymilton @dir_susee pic.twitter.com/lJERdzCzJd
— venkat prabhu (@vp_offl) June 12, 2019