தன்னம்பிக்கையின் 30 வருடங்கள்: அஜித் குறித்து பிரபல இயக்குனரின் பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் திரை உலகிற்கு வந்து 30 வருடங்கள் ஆனதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். மேலும் இது குறித்த காமன் - டிபி புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் அஜித்தின் 30 வருட திரையுலக வாழ்க்கைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
’தன்னம்பிக்கையின் 30 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் விக்னேஷ் சிவன் பதிவு செய்திருப்பதாவது: தன்னம்பிக்கை, ஆர்வம், இரக்கம், பணிவு, பணிவு, விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த மனிதனை 30 ஆண்டுகளாக மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளது. இன்னும் பல வருடங்கள் உங்களை பார்த்து மகிழ்ச்சியுடன் இருக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம், நன்றி அன்புள்ள அஜித் சார்! என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
Thirty years of #ThanNambikkai
— Vignesh Shivan (@VigneshShivN) August 3, 2022
self confidence, passion , compassion,humility,humbleness, perseverance,hard work & dedication has made this Man rule the hearts of people for 30 years now!
To more years of sheer joy of jus watchin U?? We pray & wish!
ThankU Dear #AjithSir ❤️ pic.twitter.com/mA43hi1JKL
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com