6வது ஆண்டு கொண்டாட்டம்.. மனைவி, மகனுடன் இயக்குனர் இன்னாசி பாண்டியன்..!

  • IndiaGlitz, [Sunday,August 27 2023]

இயக்குனர் இன்னாசி பாண்டியன் தனக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து மனைவி மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அருள்நிதி நடித்த ’டைரி’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் இன்னாசி பாண்டியன் என்பதும் இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. வித்தியாசமான திரைக்கதையில் உருவான இந்த படம் வெளியாகி நேற்றுடன் ஒரு வருடம் முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புல்லட்’ என்ற திரைப்படத்தை தற்போது இன்னாசி பாண்டியன் இயக்கி வருகிறார். 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் வைஷாலி ராஜ் நாயகியாக நடிக்க இருப்பதாகவும், ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் இன்னாசி பாண்டியன் தனது ஆறாவது திருமண நாளை கொண்டாடிய நிலையில், மகன் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களின் லைக் குவிந்து வருகிறது.