விக்ரமின் சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம். ஹரி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,August 02 2016]

சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்தின் இசை வெளியீடு சற்று முன்னர் சென்னையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஹரி, விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹரியின் இயக்கத்தில் ஏற்கனவே விக்ரம், 'சாமி' மற்றும் 'அருள்' ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் விரைவில் 'சாமி 2' படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தை 'இருமுகன்' படத்தின் தயாரிப்பாளர் ஷிபுதமீன் தயாரிப்பார் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

கடந்த 2003ஆம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த போலீஸ் படமான 'சாமி', மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியை நம் கண்முன் நிறுத்திய விக்ரம், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் நடிக்கவுள்ளது உண்மையில் அனைவருக்குமே ஒரு சந்தோஷமான விஷயம்தான்.

More News

அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால்? 'கபாலி' யோகியின் பதில் என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் ரஜினியின் பக்குவப்பட்ட நடிப்பை அனைத்து தரப்பினர்களும்...

கைமாறுகிறது கமலின் விஸ்வரூபம் 2' விரைவில் ரிலீஸ்

உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்த 'விஸ்வரூபம்' திரைப்படம் பலவிதமான தடைகளை தாண்டி கடந்த 2013ஆம் ஆண்டு...

நட்டி நட்ராஜின் 'போங்கு' மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி

பிரபல ஒளிப்பதிவாளரும், 'சதுரங்க வேட்டை' நாயகனுமாகிய நட்டி நட்ராஜ், 'போங்கு' என்ற படத்தில் நடித்து வருவதும்...

விஜய்யின் அடுத்த பட இயக்குனர் யார்?

'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'விஜய் 60' ...

'கபாலி'யால் கிடைத்த லாபம் எவ்வளவு? விரிவான தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படம் இரண்டாவது வாரமாக சூப்பர் ஹிட்...