நல்லவர்கள், கெட்டவர்கள், சூப்பர் ஹீரோ.. 'ரத்னம்' படத்தின் கதையை ஓப்பனாக கூறிய ஹரி..!

  • IndiaGlitz, [Thursday,April 04 2024]

இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்னம்’ திரைப்படம் இம்மாதம் 26ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவலை ஹரி ஓப்பனாக கூறியுள்ளார்

விஷால் மற்றும் ஹரி இணைந்து ’தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ ஆகிய படங்களில் பணிபுரிந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இருவரும் இணைந்துள்ள படம் தான் ‘ரத்னம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணியும் முடிவடைந்துவிட்டதாகவும் தற்போது ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டி அளித்த இயக்குனர் ஹரி, இந்த படத்தின் கதை குறித்து தெரிவித்துள்ளார். நாட்டில் 60% கெட்டவர்கள் மற்றும் 40% நல்லவர்கள் இருக்கிறார்கள், கெட்டவர்களிடம் இருந்து நல்லவர்களை காப்பாற்ற வீறுகொண்டு எழும் ஒருவன் தான் ‘ரத்னம்’. சினிமாவில் தான் இது போன்ற சூப்பர் ஹீரோக்களை பார்க்க முடியும், நிஜத்தில் பார்க்க முடியாது, அதற்கு சட்டத்திலும் இடம் இல்லை, நல்லவர்களின் வலியை போக்கும் ஒருவன் தான் ஹீரோவாக உருவாக முடியும், அப்படிப்பட்ட ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டர் தான் ‘ரத்னம்’ என்று கூறியுள்ளார்

மேலும் ’சாமி’ ’சிங்கம்’ படங்களில் இருந்த ஆக்சன் காட்சிகளை விட வெறித்தனமாக இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் உள்ளது என்றும் இந்த படத்தின் பப்ளிசிட்டி பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். என்ன தான் பெரிய இயக்குனர் மற்றும் ஹீரோ இருந்தாலும் பப்ளிசிட்டி ஒரு படத்திற்கு முக்கியம் என்றும் ஒரு படத்தை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்த்தால் மட்டுமே அந்த படம் வெற்றி அடையும் என்றும் ஹரி தெரிவித்துள்ளார்.