பிரபல இயக்குனரின் தாயார் மறைவு: சூர்யா இறுதி அஞ்சலி
- IndiaGlitz, [Sunday,December 01 2019]
சூர்யா நடித்த ‘சிங்கம்’ பட வரிசைகள் படங்கள் உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஹரி. இவரது தாயார் கனி அம்மாள் நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.
ஹரியின் தாயார் கனி அம்மாள் மறைவுச்செய்தி அறிந்ததும் நடிகர் சூர்யா, நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். மேலும் ஹரி மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் மறைந்த கனி அம்மாள் அவர்களின் இறுதிச்சடங்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கச்சன்விளையில் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்த சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.