இயக்குனர் ஹரி வீட்டில் நடந்த துக்க நிகழ்வு.. திரையுலகினர் இரங்கல்..!

  • IndiaGlitz, [Saturday,October 21 2023]

இயக்குனர் ஹரி வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வுக்கு திரையுலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஹரி என்பதும் அவர் தற்போது விஷால் நடித்து வரும் ‘விஷால் 34’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்தது.

இந்நிலையில் இயக்குனர் ஹரியின் தந்தை விஆர் கோபாலகிருஷ்ணன் என்பவர் வயது மூப்பு காரணமாக சற்றுமுன் காலமானார். ஹரியின் தந்தை மறைவு அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக ஹரியின் தந்தை உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மறைந்த கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு ஹரியுடன் சேர்த்து ஐந்து மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் உள்ள ஹரியின் இல்லத்தில் தற்போது அவரது உடல் வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

'கைதி 2' படத்தை அடுத்து இன்னொரு சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம்.. கார்த்தி அறிவிப்பு..!

 கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கில் வசூலை அள்ளும் 'லியோ': 2 நாள் வசூல் இத்தனை கோடியா?

தளபதி விஜய் நடித்த  'லியோ' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் வசூலையும் வாரி குவித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

விஷால், ஆர்யா இணைந்து வெளியிட்ட  சதீஷ் பட ஃபர்ஸ்ட் சிங்கிள்:  “லைஃப் இஸ் மேஜிக்”!!

நகைச்சுவை நாயகன் சதீஷ் நடிப்பில் வித்தியாசமாக உருவாகியுள்ள “வித்தைக்காரன்” படத்தின் முதல் சிங்கிள் “லைஃப் இஸ் மேஜிக்”  பாடலை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் விஷால் மற்றும் ஆர்யா

டேஞ்சர் ஜோனில் இருந்த 3 பெண் போட்டியாளர்களும் எஸ்கேப்.. அப்ப எவிக்சன் இவரா?

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர் எலிமினேஷன்

ரஜினியை அடுத்து 'லியோ' படம் பார்த்த கமல்.. வைரல் புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே பார்த்து, தயாரிப்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தார்