மனைவி, 3 குழந்தைகளுடன் வைரலாகும் ஹரி ஃபேமிலி புகைப்படம்!

  • IndiaGlitz, [Saturday,February 13 2021]

தமிழ் சினிமாவில் அதிக ஹிட் கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் ஹரி என்பது அனைவரும் அறிந்ததே. பிரசாந்த், சிம்ரன் நடித்த ’தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹரி, அதன் பின்னர் சாமி, அருள், அய்யா, ஆறு, தாமிரபரணி உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயற்றினார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிய சிங்கம் சீரியஸ் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குனர் ஹரி பிரபல குணசித்திர நடிகர் விஜயகுமாரின் மகள் ஃப்ரீதாவை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர்.

ஹரி, ப்ரீதா புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வலம் வந்தாலும் தற்போது மிகவும் அரிதாக மூன்று குழந்தைகளுடன் ஹரி மற்றும் ப்ரீதா தம்பதி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் ஹரி தற்போது அருண்விஜய் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

'சித்தி 2' சீரியலில் இருந்து ராதிகா விலகியது இதற்குத்தானா?

நடிகை ராதிகா சமீபத்தில் 'சித்தி 2' சீரியலில் இருந்து வெளியேறினார் என்ற செய்தியை தனது ட்விட்டர் மூலம் தெரிவித்தார் என்பதை பார்த்தோம். 'சித்தி 2' என்ற மெகா சீரியல் இருந்து நான் வெளியேறும்

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி… ஆலோசனைக் கூட்டத்தில் மாஸ் என்ட்ரி!

தமிழகச் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வீடு இல்லாத ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்களுக்கு கான்க்ரீட் வீடுகள்… முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அதிரடி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

தஞ்சையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 3 பேருக்கு மயக்கம்… அதிர்ச்சி தகவல்!

அவசரகால அடிப்படையில் கோவேக்ஷின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது

ஓவியாவா இப்படி ஒரு டுவீட்டை போட்டது? ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஓவியா அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் டுவிட்டுக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு