ரசிகர்களிடம் இயக்குனர் ஹரியின் உருக்கமான வேண்டுகோள்

  • IndiaGlitz, [Monday,February 06 2017]

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன் நடித்த 'சி 3' திரைப்படம் வரும் 9ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் மட்டும் பார்க்குமாறு சினிமா ரசிகர்களிடம் இயக்குனர் ஹரி உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: மக்களை திருப்திபடுத்தவே நாங்கள் படமெடுக்குகிறோம். நாங்கள் இஷ்டப்பட்டு வேலை செய்வதை போல தயாரிப்பாளர்கள் இஷ்டப்பட்டும் கஷ்டப்பட்டும் வேலை செய்கின்றனர். ஒரு தயாரிப்பாளருக்கு படம் எடுத்தால் மட்டும் லாபம் கிடைத்துவிடாது. அந்த படம் மக்களை சென்றடைந்து நல்ல வசூல் செய்தால் தான் லாபம் கிடைக்கும். எனவே இந்த படத்தை தயவுசெய்து திரையரங்கில் மட்டும் பாருங்கள்
இளைஞர்கள் தற்போது மிகப்பெரிய புரட்சி செய்துள்ளீர்கள். அதேபோல் மீண்டும் ஒரு புரட்சி செய்யும் வகையில் யாராவது இந்த படத்தை வேறு மீடியாக்களில் பார்க்காதீர்கள். அப்படி யாராவது பார்த்தால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். மேலும் ஒரு படத்தை திரையரங்கில் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது. இதை நான் ஒரு கிரியேட்டராக உணர்ந்து சொல்கிறேன். நகைச்சுவை காட்சியில் சிரிப்பு, சோகக்காட்சியில் கண்கலங்குவது திரையரங்குகளில் படம் பார்க்கும்போது மட்டுமே கிடைக்கும் உணர்வு.
அதேபோல் படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள். அதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு. நன்றாக இருந்தால் பாராட்டுங்கள், இல்லையே கலாய்த்து விமர்சனம் செய்யுங்கள். இப்போது உங்கள் ஒவ்வொருவரின் கையிலும் மீடியா இருப்பதை இதை நீங்கள் தாராளமாக செய்யலாம். ஆனால் தயவுசெய்து தியேட்டரில் படம் பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள் என்பதை எனது தாழ்மையான வேண்டுகோளாக வைக்கின்றேன்.
இவ்வாறு இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.