ஒரு வழியா என்னாலயும் அப்டேட் கொடுக்க முடிஞ்சது.. ரிலீஸ் தகவலை வெளியிட்ட இயக்குனர் ஹலிதா..!

  • IndiaGlitz, [Saturday,July 20 2024]

இயக்குனர் ஹலிதா ‘என்னாலயும் அப்டேட் கொடுக்க முடிந்தது’ என்று கூறி தனது அடுத்த படமான ’மின்மினி’ படத்தின் ரிலீஸ் தகவலை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

‘சில்லு கருப்பட்டி’ ‘ஏலே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஹலிதா ஷமிம், ’மின்மினி’ என்ற படத்தை கடந்த சில ஆண்டுகளாக இயக்கி வருகிறார். தமிழ் திரைப்பட வரலாற்றில் நிஜமாகவே ஒரு பீரியட் படத்தை இவர் எடுத்திருக்கிறார் என்று பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஏனெனில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரங்களுடன் ’மின்மினி’ என்ற படத்தை இயக்கத் தொடங்கிய ஹலிதா, அதன் பின்னர் அந்த ஆறு குழந்தை நட்சத்திரங்களும் வளர்ந்து இளைஞர்களாக வரும் வரை காத்திருந்து அதன் பின்னர் இரண்டாம் பாதியை அவர்களை வைத்தே இயக்கி உள்ளார்.

இந்த படம் விரைவில் ரிலீசாகும் என்று கடந்த சில மாதங்களாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைதளத்தில் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

ஒரு வழியா என்னால அப்டேட் கொடுக்க முடிஞ்சது, அதிக ஆண்டுகள் எதிர்பார்த்து சோர்வுறாமல், அதே உத்வேகத்துடன் நேற்று மெசேஜ் அனுப்பிய அனைவருக்கும் நன்றி! மின்மினியை மேற்கொண்டு மிளிர செய்யுங்கள், திரைக்கு வருகை தந்து! அடுத்த மாதம் சந்திப்போம்’ என்று கூறியுள்ளார்.

மேலும் ஆகஸ்ட் வெளியீடு என்ற புதிய போஸ்டருடன் ’மின்மினி’ படத்தின் போஸ்டரை இயக்குனர் ஹலிதா வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் ஆகி வருகிறது.

 

More News

விஜய் - ரம்பா சந்திப்புக்கு இதுதான் உண்மை காரணமா? இணையத்தில் பரவி வரும் தகவல்..!

கடந்த சில நாட்களுக்கு முன் தளபதி விஜய்யை நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் இது ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று தான் கூறப்பட்டது

க்யூட் ஃபேமிலி.. கணவர் குழந்தைகளுடன் இயற்கையை ரசிக்கும் சமீரா ரெட்டி.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகை சமீரா ரெட்டி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கர்நாடகா - கோவா எல்லையில் உள்ள காட்டு பகுதியில் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார்.

திருமணத்திற்கு பின் தேவதை போல் ஒரு போட்டோஷூட்.. கணவருடன் வரலட்சுமியின் வீடியோ..!

நடிகை வரலட்சுமிக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் திருமணத்துக்கு பின்னர் கணவருடன் தேவதை போன்ற காஸ்ட்யூமில் எடுத்த வீடியோவை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம்

சென்னையில் மஞ்சு வாரியர் மகளுக்கு கிடைத்த பெருமை.. ஒரு வாழ்த்து கூட இல்லையா?

நடிகை மஞ்சு வாரியரின் மகள் டாக்டர் பட்டம் பெற்றுள்ள நிலையில் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் திரை உலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும்

ஆன்மிகம் ஆயிரம்: பிரபஞ்ச ரகசியங்கள் குறித்து ராஜேஷ் - ஸ்ரீகவி உரையாடல்!

பிரபல நடிகர் ராஜேஷ் அவர்கள் யூடியூப் சேனல் ஆன்மீக கிளிக்ஸ்ஸில் "ஆன்மிக ஆயிரம்" என்ற தலைப்பில் ஆன்மீக சிந்தனையாளர் ஸ்ரீகவியை பேட்டி எடுத்துள்ளார்.