ஒரு வழியா என்னாலயும் அப்டேட் கொடுக்க முடிஞ்சது.. ரிலீஸ் தகவலை வெளியிட்ட இயக்குனர் ஹலிதா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் ஹலிதா ‘என்னாலயும் அப்டேட் கொடுக்க முடிந்தது’ என்று கூறி தனது அடுத்த படமான ’மின்மினி’ படத்தின் ரிலீஸ் தகவலை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
‘சில்லு கருப்பட்டி’ ‘ஏலே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஹலிதா ஷமிம், ’மின்மினி’ என்ற படத்தை கடந்த சில ஆண்டுகளாக இயக்கி வருகிறார். தமிழ் திரைப்பட வரலாற்றில் நிஜமாகவே ஒரு பீரியட் படத்தை இவர் எடுத்திருக்கிறார் என்று பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஏனெனில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரங்களுடன் ’மின்மினி’ என்ற படத்தை இயக்கத் தொடங்கிய ஹலிதா, அதன் பின்னர் அந்த ஆறு குழந்தை நட்சத்திரங்களும் வளர்ந்து இளைஞர்களாக வரும் வரை காத்திருந்து அதன் பின்னர் இரண்டாம் பாதியை அவர்களை வைத்தே இயக்கி உள்ளார்.
இந்த படம் விரைவில் ரிலீசாகும் என்று கடந்த சில மாதங்களாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைதளத்தில் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஒரு வழியா என்னால அப்டேட் கொடுக்க முடிஞ்சது, அதிக ஆண்டுகள் எதிர்பார்த்து சோர்வுறாமல், அதே உத்வேகத்துடன் நேற்று மெசேஜ் அனுப்பிய அனைவருக்கும் நன்றி! மின்மினியை மேற்கொண்டு மிளிர செய்யுங்கள், திரைக்கு வருகை தந்து! அடுத்த மாதம் சந்திப்போம்’ என்று கூறியுள்ளார்.
மேலும் ஆகஸ்ட் வெளியீடு என்ற புதிய போஸ்டருடன் ’மின்மினி’ படத்தின் போஸ்டரை இயக்குனர் ஹலிதா வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் ஆகி வருகிறது.
#Minmini #MinminiTheMovie
— Halitha (@halithashameem) July 20, 2024
ஒரு வழியா என்னால update கொடுக்க முடிஞ்சது, after all these years! 🥹
எதிர்பார்த்து சோர்வுறாமல், அதே உத்வேகத்துடன் நேற்று மெசேஜ் அனுப்பிய அனைவருக்கும் நன்றி! மின்மினியை மேற்கொண்டு மிளிர செய்யுங்கள், திரைக்கு வருகை தந்து! அடுத்த மாதம் சந்திப்போம்❤️… pic.twitter.com/SzkV3wVnCL
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments