'வலிமை' படத்தில் சம்பளம் வாங்காமல் பணிபுரிந்த பிரபல இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் வெளியான ’வலிமை’ படத்தின் ட்ரெய்லர் யூடியூப்பில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனையை செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’வலிமை’ படம் குறித்து சில முக்கிய தகவல்களை இயக்குனர் வினோத் அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இரண்டு பாடல்கள் எழுதி உள்ளதாகவும் ஆனால் அந்த இரண்டு பாடல்களுக்கு உரிய சம்பளத்தை பெற அவர் மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அஜித் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து இருந்தாலும் ஒரு காட்சியில் கூட அவர் காவல்துறை யூனிபார்ம் இல்லாமல் தான் நடித்துள்ளார் என்றும் எச்.வினோத் கூறியுள்ளார்.
மேலும் ’வலிமை’ படத்தின் கதையில் அஜித் சில நிபந்தனைகளை விதித்து இருந்ததாகவும், எந்த ஒரு துறையையும் குறிப்பாக காவல் துறையில் உள்ள அனைவரையும் மோசமானவர்கள் என்பது போன்ற காட்சிகள் இருக்கக்கூடாது என்றும், எந்தவித தனிப்பட்ட நபர்களை குறி வைக்கும் காட்சிகள் இருக்கக் கூடாது என்றும், அதேபோல் அரசியல் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கக் கூடாது என்றும் அவர் தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இந்த படத்தில் உள்ள ஹீரோவின் கேரக்டர் மற்றும் கதை இரண்டுமே மிகவும் வலிமையானது என்பதால் இந்த படத்திற்கு ’வலிமை’ என்ற டைட்டில் வைத்ததாகவும் இயக்குனர் எச் வினோத் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments