அவசர சட்டம் வராவிட்டால் முதல்வரை முற்றுகையிடுவோம். பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Thursday,January 19 2017]

ஜல்லிக்கட்டு போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளதால் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் அவசர சட்டம் குறித்து பிரதமர் எந்த உத்தரவாதமும் தந்துள்ளதாக இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை
இந்நிலையில் சென்னை மெரினா இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்ற பிரபல இயக்குனர் கவுதமன், '"ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்றக் கோரி பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். பிரதமரை சந்தித்த பிறகும் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் வராவிடில் சென்னை திரும்பும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிடுவோம்" என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே சமீபத்தில் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர் இயக்குனர் கவுதமன் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜல்லிக்கட்டு பிரச்சனை: முதல்வரிடம் மோடி கூறியது என்ன?

தமிழகத்தில் இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த நேற்றிரவு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார்

வெளிநாட்டு பானங்களை விற்க மாட்டோம். விழிப்புணர்வு பெற்ற வணிகர்கள்

வெளிநாட்டு பாங்களில் பூச்சி மருந்து கலந்துள்ளதால் அதை உபயோகிக்க வேண்டாம் என்று ஏற்கனவே பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை அந்நிய நாட்டு குளிர்பானங்களை வாங்கி விற்க மாட்டோம் என வணிகர்கள் அறிவித்து வருகிறனர். முதல்கட்டமாக தேனி ம

எனது மாநிலம் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. விஸ்வநாதன் ஆனந்த்

சென்னை மெரீனா கடற்கரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களின் எழுச்சி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

'மிக்சர்' சாப்பிட்ட அந்த நடிகர் யார்? கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்

ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது அந்நாட்டு மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்ததை போல ஜல்லிக்கட்டு பிரச்சனை தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததை, அவர் மிக்சர் சாப்பிடுவதை போல மீம்கள் சமூக வலைத்தளங்களில

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசு ஊழியர்கள். லாரிகள், கடைகள் இயங்காது

தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஜல்லிக்கட்டுக்காக நடத்தப்பட்டு வரும் போராட்டம் உலக ஊடகங்களின் கவனத்தை திருப்பியுள்ளது. சென்னை மெரினாவில் ஆரம்பித்த சிறு பொறி இன்று உலகம் முழுவதும் பற்றி எரிகிறது. ஒவ்வொரு துறையாக ஆதரவு கொடுத்து கொண்டே வருவதால் போராட்டத்தின் தீவிரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது...