'கொரோனா குமார்' படம் டிராப்பா? இயக்குனர் கோகுல் விளக்கம்

  • IndiaGlitz, [Friday,March 11 2022]

சிம்பு நடிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கொரோனா குமார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் திடீரென சிம்புவுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட சம்பள பிரச்சனை காரணமாக இந்த படம் நிறுத்தப்பட்டதாக ஒருசில ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த நிலையில் இயக்குனர் கோகுல் இது குறித்து விளக்கமளித்துள்ளார். ’கொரோனா குமார்’ திரைப்படம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் உண்மையானவை அல்ல என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிம்பு தற்போது ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளதை அடுத்து அந்த படப்பிடிப்பை முடித்த உடன் அவர் ’கொரோனா குமார்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பகத் பாசில் நடிக்க உள்ளார் என்றும் விஜய்சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து ’கொரோனா குமார்’ திரைப்படம் டிராப் என டிராப் என வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

More News

டிரோன் கேமிராவை இயக்கிய அஜித்: 'வலிமை' ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்

https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/spotted-ajith-handles-a-drone-at-the-valimai-shooting-spot/articleshow/90150157.cms

சென்னை மேயரை சந்தித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா

சென்னை மேயராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட பிரியா ராஜன் அவர்களை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சந்தித்து உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

முதல்ல வொர்க்-அவுட் ஆகல, இன்னொரு முறைக்காக வெயிட்டிங்: சிம்பு குறித்து தமன்னா!

சிம்புவுடன் நடித்த முதல் படத்தில் செமிஸ்ட்டரி ஒர்க்கவுட் ஆகவில்லை என்றும் அவருடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஆவலுடன் இருப்பதாக நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டி

'எதற்கும் துணிந்தவன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சூர்யாவின் திரைப்படம் ஒன்று திரையரங்குகளில் வெளியாவதை

உபி தேர்தலில் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்த 'மிஸ் பிகினி'  நடிகை!

மிஸ் பிகினி பட்டம் பெற்ற பிரபல நடிகை ஒருவர் சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.