close
Choose your channels

இனியும் பொறுக்க முடியாது: புதிய கட்சியை ஆரம்பிக்கும் தமிழ் இயக்குனர்

Saturday, February 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்குபின் திரையுலகில் உள்ள பலர் புதிய கட்சிகளை ஆரம்பித்து வரும் நிலையில் தற்போது இயக்குனர் கவுதமன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

இயக்குனர் கவுதமன் கடந்தசில ஆண்டுகளாக ஒருசில போராட்டங்கள் நடத்தி சிறைக்கும் சென்றுள்ளார். இவர் விரைவில் ஒரு அரசியல் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் நாளை புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாகவும் தனது கட்சியின் கொடி, சின்னம் மற்றும் கொள்கைகள் குறித்த அறிவிப்பை நாளை அறிவிக்கவுள்ளதாகவும் இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியும், தமிழர்களின் கலாசாரமும் வேகமாக அழிக்கப்பட்டு வருவதாகவும் இந்த அழிவை இனியும் பார்த்து கொண்டிருக்க முடியாது என்றும், தங்கள் கட்சி இந்த அழிவு ஏற்படாமல் அரணாக நிற்கும் என்றும் இதுவரை இழந்ததை மீட்போம் என்றும் இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக கூறியதும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள் கூட தனக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறியதாகவும், தங்கள் கட்சியின் உதயம் ஒரு மிகப்பெரிய ஜனநாயக யுத்தத்தின் துவக்கமாக இருக்கப் போவதாகவும் கவுதமன் மேலும் கூறினார்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment