கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட பிரபலம் திடீர் வாபஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழியும் பாஜக வேட்பாளராக தமிழிசையும் போட்டியிடுகின்றனர். இருவரது வேட்புமனுக்களும் நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டதால் இருவரின் போட்டி உறுதியாகிவிட்டது. மேலும் இந்த தொகுதியில் அமமுக வேட்பாளராக ம.புவனேஸ்வரன் என்பவரும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக டி.பி.எஸ்.பொன் குமரன் என்பவரும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் இந்த தொகுதியில் சமீபத்தில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்த இயக்குனர் வ.கவுதமனும் போட்டியிடுவதாக அறிவித்து வேட்புமனுவையும் தாக்கல் செய்தார்.
இந்த் நிலையில் இன்று இயக்குனர் கவுதமன் தான் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவை திடீரென வாபஸ் பெற்றார். இதுகுறித்து அவர் கூறியபோது வரும் ஏப்ரல் 18ல் தூத்துக்குடியில் நடைபெற உள்ளது தேர்தல் அல்ல என்றும், ஜனநாயக படுகொலை என்று கருத்து தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com