தூத்துகுடி தொகுதியில் திடீரென களமிறங்கிய திரைப்பட இயக்குனர் !
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட நேற்றுடன் மனுதாக்கல் முடிவடைந்த நிலையில் நேற்று தூத்துகுடி தொகுதியில் போட்டியிட கடைசி நேரத்தில் இயக்குனர் வ.கவுதமன் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழியும், அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக தமிழிசையும் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதியாக இந்த தொகுதி மாறியுள்ளது. மேலும் அமமுக வேட்பாளராக ம.புவனேஸ்வரன் என்பவரும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக டி.பி.எஸ்.பொன் குமரன் என்பவரும் போட்டியிடுவதால் இந்த தொகுதியின் தேர்தல் களம் விறுவிறுப்பாகியுள்ளது
இந்த நிலையில் ஸ்டெர்லைட் பிரச்சனையின் போதும், தூத்துகுடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் கடும் எதிர்ப்பை தெரிவித்து மக்களின் கவனத்தை ஈர்த்த போராட்டங்களை நடத்திய இயக்குனர் வ.கவுதமன் இந்த தொகுதியில் போட்டியிடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை எனினும், இவர் பிரிக்க போகும் வாக்குகள் கனிமொழி அல்லது தமிழிசை இருவரில் ஒருவருக்கு பாதகமான அம்சமாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments