தஞ்சை குடமுழுக்கை தடுக்க சென்ற பிரபல இயக்குனர் கைது!
- IndiaGlitz, [Wednesday,February 05 2020]
தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்று வருகிறது. இந்த குடமுழுக்கு விழாவில் தமிழில் மட்டுமே மந்திரம் சொல்ல வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் மந்திரம் சொல்லலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து இரு மொழிகளிலும் மந்திரம் சொல்லி குடமுழுக்கு விழா இன்று நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என இயக்குனர் கௌதமன் சமீபத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களிடம் மனு ஒன்றை அளித்தார். இருப்பினும் தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து இன்று தஞ்சையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த தனது ஆதரவாளர்களுடன் இயக்குனர் கௌதமன் சென்றுகொண்டிருந்தார். ஆனால் அவர் உளுந்தூர்பேட்டை அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இயக்குனர் கௌதமன் கைது நடவடிக்கைக்கு அவரது ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.