தனுஷ் படத்தின் வில்லனாகும் பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Thursday,May 19 2016]

தனுஷ் நடித்து முடித்துள்ள 'தொடரி' மற்றும் 'கொடி' ஆகிய படங்களின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் எந்த நேரத்திலும் இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் துருக்கி படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. ஒரு பாடல் காட்சி மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் துருக்கியில் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் 'பாகுபலி' வில்லன் ராணா வில்லன் கேரக்டரில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இன்னொரு வில்லனாக இயக்குனர் கவுதம் மேனன் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தான் இயக்கும் படங்களில் ஒரு சிறு காட்சியில் நடிப்பது கவுதம் மேனனுக்கு வழக்கம் என்றாலும் இந்த படத்தில் அவர் ஒரு முக்கிய கேரக்டரை ஏற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' மற்றும் வொண்டர்பார் பிலிம்ஸ்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.