மகனுக்கு வித்தியாசமாக முடிவெட்டிய பிரபல இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்குகிறார்களோ இல்லையோ முதல் வேலையாக அனைவரும் சலூன் முன் நிற்பார்கள். 21 நாட்கள் முடிவெட்டாமல் பலர் இருப்பார்கள் என்பதால் அவர்களுடைய முதல் வேலை சலூனில் சென்று முடிவெட்டுவதாகத்தான் இருக்கும்.
இந்த நிலையில் ‘தூங்கா நகரம்’ மற்றும் விக்ரம்பிரபு நடித்த ’சிகரம் தொடு’ போன்ற படங்களை இயக்கியவரும் ஒரு சில படங்களில் நடித்தவருமான கவுரவ் நாராயணன் தனது மகனுக்கு வித்தியாசமான ஸ்டைலில் முடி வெட்டியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
கிட்டத்தட்ட உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பல நடிகர், நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு தாங்களே முடிவெட்டி அழகு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது கவுரவ் நாராயணன் அவர்களும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Director’s cut , busy with Sanjit pic.twitter.com/py9MndaOaa
— Gaurav narayanan (@gauravnarayanan) March 31, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments