close
Choose your channels

பூஜை போட்ட அன்றே வியாபாரம் ஆன உதயநிதி திரைப்படம்

Tuesday, August 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த 'மனிதன்' திரைப்படமும், எழில் இயக்கிய 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படமும் வணிக ரீதியாக வெற்றி பெற்றதோடு ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்தது. இந்நிலையில் தனித்தனியே வெற்றி பெற்ற உதயநிதியும் எழிலும் ஒரு படத்தில் இணைகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்கால் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறவுள்ளது. மேலும் பூஜை போடப்பட்ட முதல் நாளே இந்த படத்தின் கோவை ஏரியாவின் உரிமை விற்பனையாகியுள்ளது. கோவை 'கந்தசுவாமி கலை கூடத்தின்' ராஜமன்னார் இந்த படத்தின் கோவை ரிலீஸ் உரிமையை குறைந்தபட்ச உத்தரவாத அடிப்படையில் பெற்றுள்ளார். மேலும் பல ஏரியாக்களின் உரிமை குறித்த வியாபாரம் பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
.முழுக்க முழுக்க காமெடியை மையமாக கொண்டு உருவாக்கப்படவுள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் நாளில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்க்ப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment