படம் பார்த்தவர்கள் தயவுசெய்து இதை மூன்றையும் சொல்லாதீங்க: 'ஸ்டார்' இயக்குனர் வேண்டுகோள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் இளன் தனது சமூக வலைத்தளத்தில் நாளை படம் பார்க்கும் நண்பர்கள் இந்த மூன்றை மட்டும் வெளியே சொல்லாதீர்கள் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பதிவு வெளியிட்ட பதிவில் ‘ஸ்டார்’ படத்தை எனது தந்தை ஸ்டில்ஸ் பாண்டியன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். மேலும் படம் பார்த்தபின் அதில் உள்ள மூன்று சர்ப்ரைஸ்களை மட்டும் தயவுசெய்து யாரும் வெளியே சொல்ல வேண்டாம். என்னுள் இருக்கும் கலைஞன் ஒவ்வொருவரும் தாங்களாகவே அனுபவித்து இந்த படத்தை பார்க்க ஆசைப்படுகிறான்’ என்று குறிப்பிட்டு தனது தந்தையுடன் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படமும் இயக்குனர் இளளின் இந்த பதிவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இயக்குனர் இளன் தந்தை அட்லி இயக்கிய ’ராஜா ராணி’ படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார் என்பதும் கிட்டத்தட்ட இவருடைய கதை தான் ‘ஸ்டார்’ படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.
கவின் ஜோடியாக அதிதி பொலங்கர் நடித்த இந்த படத்தில் லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் எழிலரசு ஒளிப்பதிவில் பிரதீப் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஸ்டார் நாளை முதல் ⭐️
— Elan (@elann_t) May 9, 2024
I dedicate this movie to my dad “STILLS PANDIAN”
Humble request : please don’t reveal the 3 pleasant surprises from #STAR once you watch it tomorrow. Artist in me badly wants everyone to experience by themselves 🙏 Thankyou ❤️ #STARMOVIE pic.twitter.com/p7D1zhkaxa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments