சினிமாவில் நான் தோல்வி அடைந்தவன்.. ஆனால் என் மகனுக்கு வெற்றி: நடிகரின் நெகிழ்ச்சி பேச்சு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சினிமாவில் நான் ஒரு தோல்வி அடைந்த நடிகன் என்றும் ஆனால் எனது மகனுக்கு அடுத்தடுத்து வெற்றி கிடைத்து வருகிறது என்று நடிகர் ஒருவர் நெகிழ்ச்சி உடன் பேசி உள்ளார்.
கவின் நடித்த ’ஸ்டார்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதில் இயக்குனர் இளன் தந்தை நடிகர் பாண்டியன் பேசிய போது தனது மகனின் வெற்றி குறித்து நெகிழ்ச்சி அடைந்தார்.
‘ராஜா ராணி’ படத்தில் அறிமுகம் ஆகிய நடிகர் பாண்டியன், அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், அவர் துணை நடிகராகவே கடைசி வரை இருந்து வரும் நிலையில் அவர் இந்த விழாவில் பேசிய போது ’சினிமாவில் நான் ஒரு தோல்வியடைந்த நடிகர், நிறைய கஷ்டங்களையும் அவமானங்களையும் அனுபவித்து இருக்கிறேன். ஆனால் என் மகன் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன், அவனுக்கு சிறு வயதிலேயே பாரதியார் வேடத்தில் நடிக்க வைத்தேன், அவனும் சினிமா கனவு உடனே வளர்ந்தான், இன்று ஒரு வெற்றி இயக்குனர் ஆகியுள்ளார் என்று பெருமையாக கூறினார்.
பட்டப்படிப்பு படித்த உடனே என் மகன் இளன் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நான் இயக்குனர் ஆகிவிடுவேன் என்று நம்பிக்கையுடன் கூறினார், அதுபோலவே அவனது கனவு நனவாகி இருக்கிறது, தற்போது ’ஸ்டார்’ என்ற கவின் படத்தை இயக்கி உள்ளார், அந்த படம் நிச்சயம் வெற்றி அடையும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
அட்லி இயக்கிய முதல் திரைப்படமான ‘ராஜா ராணி’ படத்தில் நடிக்கும் போது தனக்கு வெறும் 3500 தான் சம்பளம் கிடைத்தது என்றும் அப்போது குறும்படத்தில் நடிப்பவர்களுக்கே 5000 சம்பளம் கிடைத்துக் கொண்டிருந்த போது குறைவான சம்பளம் என்றாலும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற கனவுக்காக நடித்தேன் என்றும் அதன் பிறகு பல வாய்ப்புகள் கிடைத்தது என்றும் அவர் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com