'ராஜா ரங்குஸ்கி' கதாநாயகி மாற்றம் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,January 10 2017]

பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய இயக்குனர் தரணிதரன் இயக்கவுள்ள அடுத்த படம் ''ராஜா ரங்குஸ்கி''. இந்த படத்தின் நாயகனாக மெட்ரோ' புகழ் ஷ்ரிஷ் மற்றும் நாயகியாக 'இறைவி' புகழ் பூஜா தேவாரியா ஓப்பந்தமாகினர்.
ஆனால் தற்போது பூஜா தேவாரியாவுக்கு பதில் 'வில் அம்பு' புகழ் சாந்தினி தமிழரசன் மாற்றப்பட்டுள்ளார். இந்த படத்தின் நாயகியாக ஒப்பந்தமான பூஜா தேவாரியாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ''ராஜா ரங்குஸ்கி' படத்தை இரண்டு மாதங்களில் முடிக்க திட்டமிட்டிருந்ததால் பூஜா தேவாரியாவுக்கு பதில் சந்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
மர்மப்பின்னணி கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் முற்றிலும் முடிந்துவிடும் என்று இந்த படத்தின் இயக்குனர் தரணிதரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

More News

30 ஆண்டுகளுக்கு பின் விஜய் அம்மாவிடம் வாழ்த்து பெற்ற பிரபல நடிகர்

கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபல நடிகராக இருந்த ரகுமான், கடந்த சில வருடங்களாக வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக உள்ளார்.

ஜல்லிக்கட்டு களத்தில் குதித்தார் தனுஷ்

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே தீரவேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழர்கள் தீவிரமாக போராடி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக திரையுலகினர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

விஜய் பிறந்த நாளை அஜித் ரசிகர்கள் கொண்டாடுவார்களா?

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் பல்கேரிய மற்றும் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் பொங்கல் திருவிழாவிற்கு பின்னர் மீண்டும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கங்கை அமரனுக்கு கேரள அரசின் மிகப்பெரிய விருது.

கேரள தேவசம் போர்டு மற்றும் கேரள சுற்றுலாத்துறை ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் ஹரிவராசனம் விருது இந்த ஆண்டு பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பொங்கல் விடுமுறை நீக்கம். உண்மையில் நடந்தது என்ன?

நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை விடுமுறையை இந்த ஆண்டு மத்திய அரசு கட்டாய விடுமுறையில் சேர்க்காமல் விருப்ப விடுமுறையில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.