கொரோனா தொற்றுக்கு பலியான இன்னொரு தமிழ் இயக்குனர்!

  • IndiaGlitz, [Sunday,May 09 2021]

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக திரை உலகினர்களை கொரோனா தொற்று ஆட்டி வைத்து வருகிறது. கடந்த சில மாதங்களில் பல திரையுலக பிரமுகர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் அதில் ஒரு சிலர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே கொரோனாவிற்கு இயக்குனர் எஸ்பி ஜனநாதன், இயக்குனர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த் உள்பட ஒருசிலர் பலியாகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு இயக்குனரும் கொரோனாவால் பலியாகியுள்ள செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்து அதன்பின் ’கண்ணுக்கு கண்ணாக’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரானவர் தயாளன். இவர் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக அடுத்தடுத்து திரையுலக பிரபலங்கள் பலியாகி வருவதை அடுத்து திரையுலகினர் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு ரசிகர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

More News

காதலிக்கு முத்தம் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்: விமான நிலையத்தில் பரபரப்பு!

பிக்பாஸ் பிரபலம் ஒருவர் விமான நிலையத்தில் தனது காதலிக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

நீங்கள் ஒரு ஹீரோ: தனுஷ் நாயகியை பாராட்டிய சோனுசூட்!  

தனுஷ் படத்தின் நாயகியை 'நீங்கள் ஒரு ஹீரோ' என நடிகர் சோனுசூட் பாராட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகர் கமலின் தோல்விக்கு என்ன காரணம்? விமர்சிக்கும் வீடியோ!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.

கொரோனா தடுப்பு பணியில் களமிறங்கிய அஜித்தின் 'தக்‌ஷா' டீம்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அஜித்தின் 'தக்‌ஷா' டீம் களம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

வாக்கு எண்ணிக்கையில் ஏமாற்ற முடியுமா? சிறப்பு நேர்காணல் வீடியோ!

இந்தியாவில் வாக்குபதிவை நடத்துவதற்கு EVM இயந்திரம் பயன்படுத்தப் படுகிறது. இந்த இயந்திரத்தைக் கொண்டு பலமுறை தேர்தல்