விஜய்யுடன் பாண்டியராஜன் - பிரித்வி சந்திப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் சமீபத்தில் சூப்பர் ஹிட் படமான 'தெறி' படத்தை அடுத்து விரைவில் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன் விஜய்யை நேரில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பாண்டியராஜன் கடந்த 1985ஆம் ஆண்டு வெளியான 'கன்னிராசி படத்தின் மூலம் இயக்குனராகி அதன்பின்னர் 'ஆண்பாவம்' படத்தின் மூலம் புகழ்பெற்று தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். அதன் பின்னர் பல படங்களை இயக்கியும், பல படங்களில் ஹீரோ, காமெடி, குணசித்திர, வில்லன் என பல்வேறு வேடங்களில் நடித்தும் உள்ளார். அதேபோல் அவருடைய மகன் பிரித்வியும் 'கைவந்த கலை' உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரித்வியின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக கோலிவுட் திரையுலக பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரும் பாண்டியராஜன் சமீபத்தில் இளையதளபதி விஜய்யை நேரில் சந்தித்து தனது மகன் திருமணத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டார். பிரித்வியின் திருமணத்திற்கு விஜய் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments